கோத்தா சிந்தனை! அமுல்படுத்தும் முகவர்கள்?

காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களிற்கு பணம் கொடுத்து வாயை மூடவைக்கும் கோத்தாவின் நகர்வை அவரது முகவர்கள் முன்னெடுக்க தொடங்கியுள்ளனர்.இதன் படி இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற விடயம்  கண்டறியப்படல் வேண்டும் என்பதோடு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும், அவர்களுக்கு நீதி வழங்கப்படுகின்ற அதேவேளை நட்டஈடும் வழங்கப்படல் வேண்டும் எனவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவின் பிரதானியான அந்தோனி எப் ரென்ஸ்சுலி அவர்களுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாருக்கிடையிலான சந்திப்பொன்று, கிளிநொச்சியில் உள்ள சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது.
இதன் போது, இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, ஜெனீவா விடயம், அதிகரித்த வேலையின்மை, முதலீடுகளின் தேவை போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகின்றது.
ஏற்கனவே இத்தகைய முயற்சியை ஆரம்பித்த டக்ளஸ் முகம் உடைபட்டு திரும்பிய நிலையில் அவரது சகா சந்திரகுமார் களமிறங்கியுள்ளார்.
தாயகச்செய்திகள்