கூகுள், பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் போட்ட தடை.!

பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பலவேறு புதிய விதிகளை திரும்பபெறாவிட்டால், தங்களது நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் பாகிஸ்தான் அரசுக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளன.

சமீபத்தில் பாகிஸ்தானில் குடிமக்களின் பாதுகாப்பு என்ற பெயரில் சமூக வலைதளங்கள் சர்வர்களை தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைத்து தகவல்களைச் அங்கேயே சேமிக்க அமைபக்க பாகிஸ்தான் அரசு கட்டாயமாக்கியது.

இந்நிலையில் ஆசிய இணைய கூட்டணி சார்பில் பாகிஸ்தான் அரசுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், புதிய விதிகள் தங்கள் சேவைகளை பாகிஸ்தானில் உள்ள பயனர்களுக்கும், வணிகங்களுக்கும் கிடைக்கச் செய்வதை மிகவும் கடினமாக்குவதாக தெரிவித்துள்ளது. மேலும், அவை இணைய பொருளாதாரத்தின் வளர்ச்சியை பாகிஸ்தானியர்களிடமிருந்து பறிக்கும் நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளன.