இராணுவ ஆட்சியை நோக்கி பயணிக்கும் இலங்கை அரசு.. பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார்

இலங்கை ஜனநாயக பாதையில் இருந்து விலகி தற்போது மெதுவாக இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

சுமார் 200 வருடகாலமாக மின்சாரம் இன்றி அவதிப்பட்ட லுணுகலை பார்க் 50 ஏக்கர் தனியார் தோட்டத்திற்கான மின்சார இணைப்பை வழங்கும் நிகழ்வு நேற்று பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் இடம்பெற்றது.

சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா செலவில் இந்தமின் விநியோகம் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அரவிந்தகுமார், நாடு சிவில் நிர்வாகஅமைப்பில் இருந்து சிறிது சிறிதாக தடம்மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

அண்மையில் இராணுவத்தினர் பங்கேற்று நேர்முகத் தேர்வு ஒன்றை நடத்தியமையின் ஊடாக இந்த நிலைமைய அவதானிக்க முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் அரச நிறுவனங்கள் பலவற்றின் முன்னாள் மற்றும் இன்நாள் இராணுவ அதிகாரிகள் பலர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதனூடாக நாடு இராணுவ மயமாக்களை நோக்கி நகர்வதை ஊகிக்க முடிவதாகவும் அவர் கூறினார்.

இந்த மூலம் இலங்கை இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்படுமோ என்ற அச்சம் சிறுபான்iமியனர் மத்தியில் எழத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பால் நாட்டின் பல பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டாலும் பெருந்தோட்ட மக்கள் வாழும் பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படாதிருப்பது கவலைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.

அதற்கு சிறந்த உதாரணமாக கடந்த 200 வருடங்களாக பார்க் 50 ஏக்கர் தனியார் தோட்டத்திற்கான மின்சாரம் வழங்கப்படாத அவல நிலையை குறிப்பிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்ட மக்கள் சார்பில் ஊவா மாகாண சபையில்பல வருடங்களாக மின்சார துறைக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவர் இருந்த போதிலும் அவரால் பார்க் 50 ஏக்கர் பகுதிக்கு மின்சாரம் வழங்க முடியவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.

பதுளை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதுவத்தை இல்லாது செய்ய சில எட்டப்பர்கள் சிலர் முழு அளவில் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அவ்வாறான நபர்களே இன்று பாராளுமன்றம் செல்ல கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுவதாகவும் அவர்களுக்கு சிறந்த பாடத்தை புகட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே எதிர்வரும் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருக்கும் இரண்டு தமிழ் பாராளுமன்ற பிரிதிநிதி துவங்களையும் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியச்செய்திகள்