25 பல்கலை மாணவர்களுக்கு இரு ஆண்டுத் தடை

களனி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த சிசிடிவி கமராக்களை நீக்கிய 25 மாணவர்களுக்கு இரு ஆண்டுகள் தடை விதித்து இன்று (28) பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 24ம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த பல கமராக்கள் மாணவர்களினால் அகற்றப்பட்டது.

இதன்பின்னணியில் தேரர் ஒருவர் உட்பட 16 மாணவர்கள் நேற்று (27) கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.