ரஷ்ய சிரியப் படைகள் தாக்குதல்! 33 துருக்கியப் படையினர் பலி!

சிரியாவின் வடக்கு எல்லையான இட்லிப் மாகாணத்தில் போராளிகள்
கட்டுப்பாட்டுப் பகுதிகளை ரஷ்யப் படைகளின் உதவியுடன் சிரியப் படைகள் மீண்டும் கைப்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அப்பகுதியில் சிரியப் படைகள் எதிர்த் தரப்பினர் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் போராளிகளுக்கு ஆதரவு வழங்கும் துருக்கிப் படையினர்  33 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 35 படையினர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிரியப் படைகள் இப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என துருக்கி காலக்கெடு வழங்கிய சில நாட்களுக்கு முன் நேற்று வியாழக்கிழமை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.