பேச்சுவார்த்தையில் சுமூகம்;அமெரிக்கா, தலிபான் இடையே உடன்படிக்கை!

அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானில் இயங்கும் தலிபான் ஆயுதக் குழுவுக்கும் இடையே போர்நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்க  ஏற்ப்படவுள்ளது.

ஏற்க்கனவே அறிவித்ததின்படி  „வன்முறைக் குறைப்பு“ ஒப்பந்தத்தின் பின்  ஒரு வாரத்திற்குப் பிறகு, இருவரும் அமெரிக்காவின் மிக நீண்ட  கால யுத்தத்தின் பின் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.

கட்டாரின் தலைநகர் டோஹாவில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகாலமக  நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் நாளை சனிக்கிழமை  சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு தரப்பினரும் தயாராகி வருவதாக சர்வதேச கண்காணிப்பளர்கள் கூறியுள்ளனர்.

உலகச்செய்திகள்