தாயக விருட்சவன்னி உதைபந்தாட்ட சமர் 2020” கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.


சுவிஸ் வாழ் உதைபந்தாட்ட கழகங்கள், மூத்த உதைபந்தாட்ட வீரர்கள், நிறுவனங்கள் , தாயக விருட்ச உறவுகள் மற்றும் உதைபந்தாட்ட சம்மேளனம் ஆகியோரின் நிதி அனுசரணையில் வருடா வருடம் தாயக விருட்சத்தினால் நடாத்தப்பட்டுவரும் “வன்னி உதைபந்தாட்ட சமர் 2020” இந்த ஆண்டு கிளிநொச்சி மண்ணில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்தும் முகமாக நாம் கிளிநொச்சி,வவுனியா, மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை ஒன்றிணைத்து அனைத்து உதைபந்தாட்ட சம்மேளனங்களின் ஆதரவுடன் நடாத்தி வருகின்றோம். இதற்கு தொடர்ந்தும் எம் சுவிஸ் உறவுகள் தாராள பங்களிப்பை செய்து வருகின்றார்கள். அவர்களின் பங்களிப்பு விபரத்தினையும் செலவு விபரத்தினையும் இங்கே பதிவேற்றுகின்றோம். இந்த மூன்று நாள் சுற்றுப்போட்டியின் செலவுகளில் அதிகமானவை எம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையும் வண்ணம் இந்த சுற்றுப்போட்டி ஒருங்கமைத்து நடாத்தப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
அனைத்தும் இலவசமாக இந்த சுற்றுப்போட்டி நடாத்தப்பட்டது. 260’000.00 உரூபா பணப்பரிசாக அனைத்து கழகங்களுக்கும் வழங்கப்பட்டது. இவை உட்பட உணவுகள, குளிர்பாணம், தங்குமிடவசதி என அணைத்துமே இலவசமாக வழங்கப்பட்டது. இதில் தெரிவுசெய்யப்பட்ட 24 கழகங்கள் பங்குபற்றின. இவை அனைத்திற்குமாக 957’351.00 உரூபா அனுசரணையாக வழங்கப்பட்டது. இந்த சுற்றுப்போட்டி 815’639.00 உரூபா செலவில் நடாத்தி முடிக்கப்பட்டது. மிகுதியான 141’712.00 உரூபாய் தொடர்ந்தும் சில விளையாட்டு ஊக்குவிற்புக்காய் பயன்படுத்தப்படும்.
இந்த ஆற்றுப்படுத்தும் உதைபந்தாட்ட சங்கமத்திற்கு அனுசரணை வழங்கிய மற்றும் இந்த போட்டி சிறப்புற நடைபெற பல வழிகளிலும் ஆதரவு வழங்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

தாயக விருட்சம் சுவிஸ் அறக்கட்டளை
செல்.ஜீவன்,
ஒருங்கிணைப்பாளர்.