இத்தாலியில் கொரொனா தொற்று! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு?

இத்தாலியில் கொரொனா தொற்று! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு?

இத்தாலியில் அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலிருந்து இத்தாலி சென்றிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என இத்தாலிய சுகாதார அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

கொழும்பில் வசிக்கும் யாழ்ப்பாணம் வடமராட்சி, நெல்லியடியைச் சேர்ந்த தம்பதியினர் இத்தாலியிலிருக்கும் தமது மகளைப் பார்ப்பதற்குச் சென்றிருந்தனர். அங்கு திடீர் சுகவீனமுற்று முதியவர் உயிரிழந்தார்.

அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவரது இறப்புக்கு கொரோனா தொற்றும் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அந்தக் குடும்பத்தை இத்தாலிய அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலத்தை இறுதிக் சடங்குக்காக இலங்கை கொண்டு செல்லவும் இத்தாலிய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.இதனால் இறுதிச் சடங்கு சில தினங்களுக்கு முன்னர் இத்தாலியில் நடைபெற்றுள்ளது.