ரஜினி கட்சி ஆரம்பித்தால் நான் ஆதரவு கொடுப்பேன்! சீமான்

ரஜினி கட்சி ஆரம்பித்தால் நான் ஆதரவு கொடுப்பேன்! சீமான்

நடிகர் ரஜினி காந்த் கர்நாடகாவில் கட்சி ஆரம்பித்தால் அவரின் கட்சிக்கு தான் முழுமையான ஆதரவு கொடுக்கத் தயாராக இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பேசிய அவர்,

ரஜினியை இழிவாக பதிவிடுவது தவறு. அரசியல், கொள்கைகள் மீது தான் எனக்கு அவரை பிடிக்காது. ஆனால், அவர் மீது அளப்பரிய மரியாதை வைத்துள்ளேன்.

கர்நாடகா அல்லது மராட்டியத்தில் கட்சி தொடங்கினால் ஆதரவு தந்து அவரை வாழ்த்தி பேச தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரஜினியைப் பற்றி சமூகவலைத்தளங்களில், என்னுடைய கட்சியை சேர்ந்தவர்கள் தவறான பதிவுகளை பதிவிட வேண்டாம் என்று சீமான் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.