யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை- கம்பா்மலை சுற்றிவளைத்த இராணுவம்…அச்சத்தில் மக்கள்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை- கம்பா்மலை பகுதியில் இன்று அதிகாலை படையினா் குவிக்கப்பட்டு திடீா் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை நடாத்தப்பட்டது,

அதிகாலை 5 மணியளவில் அதிகளவான இராணுவ நடமாட்டத்தை பொதுமக்கள் சிலா் அவதானி த்துள்ளனா்.

இதனையடுத்தே படையினரின் சுற்றிவளைப்பு குறித்து தொியவந்துள்ளது.

இதேவேளை குறித்த பகுதிக்கூடாக கடத்தப்பட்டுவரும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் அந்த பகுதியிலேயே பதுக்கிவைக்கப்படுவதாகவும்,

அதனை இலக்குவைத்தே இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடாத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது வீடு வீடாக நுழைந்த இராணுவத்தினா் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் விசாரணைகளை நடாத்தியதாக பிரதேசவாசி ஒருவா் தெரிவித்துள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

Allgemein