நீதிமன்றம் காட்டிய அதிரடி – யாழில் அடங்கியது பதற்றம்

யாழ்ப்பாணம் – புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்ட முயற்சியால் அங்கு 4.30 மணியில் இருந்து நான்கு மணி நேரம் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து மயானப் பகுதியில் இராணுவம், அதிரடி படையினர் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதற்காக 500 மீற்றர் தூரத்தில் பாதுகாப்பு எல்லையும் பொலிஸாரால் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய சடலத்தை பிறிதொரு மயானத்தில் தகனம் செய்ய சற்றுமுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் எதிர்ப்பாளர்களில் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாயகச்செய்திகள்