செய்யாத கொலைக்கு 23 ஆண்டுகள் சிறை; 1.5மில்லியன் டாலர் இழப்பீடு

1994இல் இரு கொலைக் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் 17 வயது லமோண்ட் மெக்கிண்டையருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்பு  தவறுதலாகச் சிறைக்கு அனுப்பப்பட்டது தெரியவந்த பிறகு 2017இல் அவர் விடுவிக்கப்பட்டார்.
தவறுதலாக சிறைக்கு அனுப்பட்டதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் மெக்கிண்டாயர்.சிறையில் கழித்த 23 ஆண்டுகளை அரசாங்கத்தால் தமக்குத் திருப்பித் தரமுடியாதே என்று அவர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
அதன் பயனாக 1.5 மில்லியன் டாலர் இழப்பீட்டுடன் ஈராண்டுக்கான சுகாதாரச் சலுகைகளையும் பெற்றார்.அத்தோடு உயர் கல்வியைத் தொடர்வதற்கான கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அவர் மீதான குற்றச்சாட்டுகளும், கைது விவரங்களும் நீக்கப்பட்டன.
தற்போது தம்மைப்போல தவறுதலாகச் சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக லாப நோக்கமற்ற அறநிறுவனத்தை நடத்தி வருகிறார் மெக்கிண்டாயர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகச்செய்திகள்