சர்வதேச விசாரணையே ஒரே வழி; மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து – ஜோன் பிசர்!!

இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து அரசாங்கம் நேற்று, முன்னர் வழங்கிய இணை அனுசரணையை முறையாக வாபஸ் பெற்றதுடன், உள்நாட்டு செயன்முறை மூலம் பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு உறுதியளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ராஜபக்ஷக்கள் பொறுப்புக்கூறுதலை முன்நகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவாவுக்கான இயக்குநர் ஜோன் பிசர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரே ஜோன் பிசர் தனது டுவிட்டரில் மேற்கண்டவாறு பதிவு செய்துள்ளார். இது குறித்து அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில் தெரிவித்திருப்பதாவது:

“இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸில்தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை வெளியேறுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் எவரும் ஏமாறக்கூடாது. போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ராஜபக்ஷக்கள் பொறுப்புக்கூறுதலை முன்நகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸில் இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

உலகச்செய்திகள்