‘என்னை இளவரசர் என்று அழைக்க வேண்டாம்’- பிரித்தானியா திரும்பிய ஹரி வேண்டுகோள்

'என்னை இளவரசர் என்று அழைக்க வேண்டாம்'- பிரித்தானியா திரும்பிய ஹரி வேண்டுகோள்

பிரித்தானிய இளவரசர் ஹரி தன்னை இளவரசர் என்று அழைக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகில் சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான பிரித்தானியா அரச குடும்பம் உள்ளது. இதில், மூத்த அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகுவதாக ஹரி தம்பதியினர் அறிவித்தனர். மேலும், தங்களுக்கு பரம்பரை சொத்துகள் வேண்டாம் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த முடிவு அரச குடும்பத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருப்பினும் ,இளவரசர் ஹரியின் முடிவை அவரது முடிவை அரச குடும்பம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், கனடாவிலேயே இருந்த ஹரி தற்போது, ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் நடைபெற்ற சுற்றுலா மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா வந்தார்.

அந்நிகழ்ச்சில் கலந்து கொண்ட அவர் “தன்னை அரச குடும்ப அடைமொழியுடன் அழைக்க வேண்டாம் என்று, ஹரி என்று அழைத்தால் போதும்” என்று தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஹரி லண்டன் வந்துள்ள நிலையில், அவர் தனது சகோதரரை சந்திப்பாரா என்று எதிர்பார்ப்பு பிரித்தானிய மக்களிடையே நிலவுகிறது. மேலும், மார்ச் 5ஆம் திகதி நடைபெற உள்ள காயம் அடைந்த இராணுவ வீரர்களுக்கான விருது வழக்கும் நிகழ்ச்சியில் ஹரி மற்றும் மேகன், குழந்தை ஆர்ச்சியுடன் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.