விசா வழங்குவதை நிறுத்தியது சவுதி

கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் புனித மக்கா மற்றும் மதீனாவுக்கான யாத்திரைகளை மேற்கொள்வோருக்கு உம்ரா விஸா வழங்கலை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

சுகாதார அறிவுறுத்தல்கள் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளமையும் இந்த தீர்மானம் எடுக்க ஏதுவாகியுள்ளது.

உலகச்செய்திகள்