கூட்டமைப்பில் ரஞ்சன் ராமநாயக்கவும் போட்டி?

சஜித் பிறேமதாசா எனக்கு வேட்புமனு தருவதாகக் கூறியுள்ளார். அதேபோன்று பாட்டாளி சம்பிக்க ரணவக்க அவர்களும் தருவதாக வாக்களித்துள்ளார் .ஒருவேளை அவர்கள் வேட்புமனு தராது விட்டால் ‘எனக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் வேட்புமனு தருவதாக’ சுமந்திரன் அவர்கள் உறுதியளித்துள்ளார்” என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
வண் சொட் என்ற பெயரில் தொலைபேசி உரையாடல்களின் குரல் பதிவுகள் வெளியாகி தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சைகளை தோற்றுவிக்க காரணமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கா சிறைச்சாலைத் தடுப்பிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன் ரஞ்சன் ராமநாயக்காவுக்காக பகீரதப்பிரயத்தனப்பட்டு பிணைபெற்றுக்கொடுத்துள்ளார்.
இதே முனைப்பு,பிரயத்தனங்களை பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பாகவும் குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணிவிடுவிப்பு போன்ற விடயங்களிலும் சுமந்திரன் செலுத்தவில்லையென்கிறார் முன்னாள் அரசியல் கைதியொருவர்.