ஒருவர் சுட்டுக் கொலை?

குருநாகல் – கெட்டிபொல பேபலேகம ஹல்மில்லவேவ பிரதேச வீடு ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் அறையில் வைத்து இவ்வாறு துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்படும் சத்தம் கேட்டுள்ள நிலையில் உறங்கி கொண்டிருந்த மனைவி மற்றும் பிள்ளை விரைந்துள்ளனர்.

இதன்போது கணவர் உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளதுடன் அவரது அருகில் துப்பாக்கி ஒன்று காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.