ஐ.நா நோக்கிய 2வது நாள் உந்துருளிப் போராட்டம்

ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் 19 வது
தடவையாக நேற்றைய தினம் கொட்டும் மழையிலும் ஐரோப்பிய ஒன்றியமுன்றலில் இருந்து ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழின அழிப்பிற்கு நீதி கோரி முக்கிய அரசியல் சந்திப்புக்கள் ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகளுடன் மேற்கொண்டு மனு கையளிக்கப்பட்டது.

இன்று 25/02/2020 வாவ்ர் மாநகரத்திலிருந்து ஆரம்பித்த ஈருருளிப் பயணம் நாமூர் மாநகரை வந்தடைந்தது.

மனிதநேய ஈருருளிப்பயணத்தை 5 உணர்வாளர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
தம்மை அர்பணித்து எம்மிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்போராட்டத்தை புலம்பெயர் நாடுகளில் உள்ள ஜனநாயகத் தளத்தைப் பயன்படுத்தி முன்நகர்த்துவதொன்றே எந்த வினவுதலுக்குமப்பால் தமிழினத்தின் விடுதலையொன்றே தம்முயிர்மூச்செனக்கொண்டு தம்மை அர்பணித்தோருக்காற்றும் கைமாறாகும். அதன்பொருட்டு எதிர்வரும் 09ஆம் திகதி சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் ஐரோப்பா வாழ் தமிழ்மக்கள் அனைவரும் எழுச்சிகொண்டு,மக்கள் போராட்டம் ஒன்றை நிகழ்த்துவதற்காக தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டிக்கொள்கிறோம்.
தாயகச்செய்திகள்