மன்னார் புதைகுழியை பாதுகாக்க போராட்டம்?

மன்னார் சதொச வளாக மனிதப் புதைகுழி எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (25) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பமான ஊர்வலம், சதொச வளாக மனித புதைகுழிக்கு அருகில் சென்று நிறைவடைந்தது.
போராட்டத்தின் போது, சதோச புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும் நீதியான விசாரணை நடாத்தக் கோரியும் சர்வதேச தலையீட்டை வலியுறுத்தியும் குரல் எழுப்பப்பட்டிருந்தது.அத்தோடு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை நேரடித் தலையீட்டையும் வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜநா அமர்வில்; இலங்கை விவகாரம் ஆராயப்படவுள்ள நிலையில் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே மன்னாhர் நீதிமன்ற காவலில் இருந்த மனித புதைகுழி எச்சங்கள் சந்தேகத்திற்குரியவகையில் சிதைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை பாதுகாக்க கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனினும் மனிதபுதைகுழி பல நூற்றாண்டுகளிற்கு முன்னதானதென அண்மையில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாயகச்செய்திகள்