புறப்பட்டது இலங்கை அணி ஜெனீவாவிற்கு?

இலங்கை தொடர்பான ஜநா 30-1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக கோத்தா தரப்பு தீர்மானித்துள்ள நிலையில் இலங்கை குழுவினரது ஜெனீவா பயணம் கவனத்தை ஈர்த்துள்ளது.
வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர் இன்று (25) ஜெனீவாவுக்கு பயணமாகவுள்ளனர்.
மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் ஆகியோர் தலைமையில் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது.
மனித உரிமைகள் பேரவையில் நாளைய தினம் இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோர் இலங்கை சார்பில் பயணித்துள்ளனர்.