ஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி!

ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை  அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது.

ஐரோப்பாவில் இத்தாலியிலும் மத்திய கிழக்கில் ஈரானில்  இருந்து கொரோனா வைரஸ்தொற்றுநோய்பரவிவரும் நிலையை அதை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு கடும் முயற்சி எடுத்து வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, இந்த தொற்றுநோய் சீனாவில்  2,600 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும்  மற்றும் 77,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், நிலைமை வேறு இடங்களில் மோசமடைந்துள்ளது.

அதேவேளை சீனாவுக்கு வெளியே கிட்டத்தட்ட 2,700 பேருக்கு வைரஸ் தாக்கம் உருதிப்படுத்தப்பட்டுள்ளதோடு 40 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏறப்பட்டுள்ளன.

ஈரானில் 15 பெரும், இத்தாலியில் எழு பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இத்தலியே உள்ளது.

எனவே ஐரோப்பாவிலும் கொரொனோ தொடர்ப்பான விழிப்புணர்வுகள் , அறிவிப்புக்கள் வந்தவண்ணம் உள்ளளன, ஐரோப்பிய ஒன்றியமும் இதை அவசரகாலமாக கருதி கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது,

உலகச்செய்திகள்