இராணுவம் கைது செய்த 41 இளைஞர்கள் விடுதலை?

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் கைது செய்யப்பட்ட 41 இளைஞர்களும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (24) இரவு 10 மணிக்கு இராணுவத்தால் சுற்றி வளைத்து கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட 41 இளைஞர்களும் இன்று (25) அதிகாலை ஒரு மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

இராணுவத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 41 பேரும் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், இராணுவ அலுவலகரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.

சந்தேக நபர்கள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் உள்ளனவா? பிடியாணை உள்ளனவா? என்பது பெரும் குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கோரப்பட்டது. அவ்வாறான ஒன்றும் இல்லை என்ற காரணத்தால் 41 பேரும் விடுவிக்கப்பட்டனர் – என பொலிஸார் கூறினர்.