இத்தாலியில் 10 நகரங்களில் கொரோனா வைரஸ்…!!

இத்தாலியில் 10 நகரங்களில் கொரோனா வைரஸ்…!!

சற்று முன் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், இத்தாலியின் வடக்கு பகுதி தொடக்கம் சுமார் 10 மிக முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இத்தாலியில் இருந்து பல நூற்றுக் கணக்கானவர்கள் லண்டன் வந்திருப்பது ஒரு புறம் இருக்க. ஆஸ்ரியா தனது எல்லையை மூடி, தனது நாட்டுக்குள் தரைவழியாக எவரும் நுளைய முடியாதவாறு செய்துள்ளது.

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் பரவி, பல நகரங்களை தாக்கியுள்ள 2வது மிக மோசமான நாடாக இத்தாலி மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் மிக மிக மோசமான விடையம் என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இத்தாலி வருவதுதான். பல ஆயிரம் , உல்லாசப் பயணிகள் இத்தாலி வந்து சென்றுகொண்டு இருக்கும் நிலையில். தற்போது இத்தாலியின் வடக்கு பக்கத்தில் இருந்து லண்டனுக்குள் யார் யார் வந்தார்கள் என பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

முதலில் ஆசிய நாடுகளில் ஆரம்பித்த கொரோனா வைரஸ். தற்போது 10,000 மைல் கடந்து ஐரோப்பிய நாடுகளையும் தாக்க ஆரம்பித்துள்ள விடையம். மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. இத்தாலியில் உள்ள பல கடைகளில் பொருட்கள் அனைத்தும் விற்று காலியாக உள்ளது. காரணம் என்னவென்றால், மக்கள் வெளியே செல்லப் பயந்து, பாரிய அளவில் பொருட்களை வாங்கி வீட்டில் பதுக்கி விட்டு இருக்கிறார்கள்.