தேர்தல் வெற்றிக்கான நேர்த்திக்கடனில் விசயகலா?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட இறுதி முடிவு செய்துள்ள முன்னாள் அமைச்சர் விசயகலா மகேஸ்வரன் நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற தமிழகம் சென்றுள்ளார்.
முன்னதாக கூட்டமைப்பு சார்பில் கொழும்பில் தேர்தலில் குதித்து தனது கணவர் போன்று வெற்றி கனியை பறிக்க அவர் திட்டமிட்டிருந்த போதும் எம்.ஏ.சுமந்திரன் தேர்தல் செலவிற்கு கேட்டிருந்த பணம் சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.
இதனையடுத்து ஜதேக சார்பில் யாழில் போட்டியிட முடிவு செய்துள்ள முன்னாள் அமைச்சர் விசயகலா தனது வெற்றிக்கான நேர்த்திக்காக தமிழக ஆலயங்களில் வழிபாட்டை ஆதரவாளர்களுடன் தொடங்கியுள்ளார்.
ஏற்கனவே இலங்கை பிரதமர் மகிந்த தனது தேர்தல் வெற்றி நேர்த்தியை நிறைவு செய்ய திருப்பதி சென்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாயகச்செய்திகள்