சுதந்திர கட்சிக்கு அழைப்பு விடுத்த சஜித்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய கூட்டணியான சமகி ஜன பலவேகயவில் இணைந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியினருக்கு குறித்த கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி சமீபத்தில் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் குமார வெல்கம உள்ளிட்ட சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான அழைப்பையும் சஜித் பிரேமதாச விடுத்துள்ளளார்.