லொட்டரியில் 700 கோடி அள்ளிய ஜேர்மானியருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்..!!

லொட்டரியில் 700 கோடி அள்ளிய ஜேர்மானியருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்..!!

கடந்த 7 ஆம் திகதி யூரோ லொட்டரியில் 90 மில்லியன் யூரோ தொகையை பரிசாக அள்ளிய ஜேர்மானியர் இதுவரை தொகையை கைப்பற்றவில்லை என தெரியவந்துள்ளது.

குறித்த தகவலை லொட்டரி நிர்வாகிகள் ஊடகங்களை தெரியப்படுத்தியுள்ளனர். தம்மிடம் இருக்கும் லொட்டரி சீட்டை உரிய நிர்வாகிகளிடம் ஒப்படைத்து தொகையை கைப்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ஜேர்மனியின் North Rhine-Westphalia பகுதியை சேர்ந்தவரே சுமார் 700 கோடி தொகையை லொட்டரியில் அள்ளியவர்.

பதினெட்டரை யூரோ செலவிட்டு இவர் லொட்டரி வாங்கியுள்ளதும் நிர்வாகிகள் தரப்பு வெளியிட்டுள்ளது.

குறித்த வெற்றியாளரின் முகவரி லொட்டரி நிர்வாகிகளுக்கு தெரியும் என்றாலும், பாதுகாப்பு காரணங்களால் வெளியிட முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

லோட்டோ ஜாக்பாட் சட்டத்தின்படி 2023 ஆம் ஆண்டு வரை குறித்த நபருக்கு அந்த 90 மில்லியன் யூரோ தொகையை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

இருப்பினும், குறிப்பிட்ட காலகட்டத்தில் பணத்தை கைப்பற்ற தவறினால் அரசிடம் ஒப்படைக்கப்படும் என நிர்வாகிகள் தரப்பு அறிவித்துள்ளது.

வெற்றிபெற்ற லொட்டரி சீட்டானது குறித்த நபரிடம் இருந்து தொலைந்திருக்கலாம் அல்லது, அவர் வெளிநாட்டில் வேலை நிமித்தமாகவோ விடுமுறையை கழிக்கவோ சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

உலகச்செய்திகள்