மீண்டும் வீரவணக்கங்கள்: வரவேற்கிறது தேர்தல்!

மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் நினைவேந்தல்கள், வீரவணக்க கூட்டங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
உள்ளுர் தலைவர்கள் பெரிய தலைவர்களை அழைத்து வந்து சுடரேற்றி அஞ்சலிப்பதையும் பின்னர் அதனை சமூக ஊடகங்களில் பிரசுரிப்பதும் மும்முரமாகியிருக்கின்றது.
இதனிடையே  நேற்று வெள்ளிக்கிழமை கரவெட்டி கிழக்கில் அமைந்துள்ள முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சிவனேசன் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.  இந்த நிகழ்வில் ஆள ஊடுருவும் படையணியால்  2008 ஆம் ஆண்டு கிளைமோர்  தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனிடையே சிவனேசனின் நடமாட்டம் பற்றிய தகவல்களை வழங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது பரப்பப்பட்ட பொய் பிரச்சாரங்களை சிவனேசனின் குடும்பம் மறுதலித்துள்ளது.
தாயகச்செய்திகள்