பெண் குரலில் பேசி உள்ளூர், வெளிநாட்டு ஆண்களை மயக்கி கோடீஸ்வரனான தமிழக இளைஞர்!

பெண் குரலில் பேசி உள்ளூர், வெளிநாட்டு ஆண்களை மயக்கி கோடீஸ்வரனான தமிழக இளைஞர்!

பெண் குரலில் பேசி தமிழக இளைஞர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு இளைஞர்களையும் மயக்கி சொத்துக்களை குவித்து சொகுசாக வாழ்ந்து வந்த ஆண் குறித்த பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் பொலிசில் 170-க்கும் மேற்பட்டவர்கள் பெயரில், பெண்ணை ஏமாற்றியதாக கூறி ஒரே மாதிரியான புகார்கள் வந்தது. பெரும்பாலும் அனைத்து புகார்களும் ஓன்லைன் மூலமாகவே கொடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக புகார்தாரரை விசாரிக்கும் போது தான் இந்த புகாரை கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உதவி ஆய்வாளர் உறவினர் ஒருவருக்கும் இதேபோன்று பொலிசார் புகார் கொடுத்ததாக விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவர் சென்னை மதுரவாயலில் சேர்ந்த பொன்ராஜ் என்பது தெரியவந்துள்ளது.

அதில் பொன்ராஜ் வேலைக்காக லோக்நெக்டோ என்ற செயலி மூலம் விண்ணப்பித்துள்ளார். அப்போது ஆபாசமாக உரையாடலாம் எனக் கூறி விளம்பரம் ஒன்று செயலியில் வந்துள்ளது. அதில் சென்று பொன்ராஜ் பார்த்தவுடன் பணப்பரிவர்த்தனை செயலி மூலம் 100 ரூபாய் செலுத்துமாறு பிரியா என்ற பெண் விளம்பரம் செய்துள்ளர்.

100 ரூபாய் அனுப்பியவுடன் பிரியா என்ற பெண்ணின் நிர்வாண படம் பொன்ராஜ் செல்போனுக்கு வந்துள்ளது.தொடர்ந்து வீடியோ காலில் பார்க்க வேண்டும் என்றால் 1500 ரூபாய் செலுத்துமாறு பிரியாவின் விளம்பரத்தில் கேட்டுள்ளார்.

அதற்கு பொன்ராஜ் 1500 ரூபாய் பணப்பரிவர்த்தனை செயலியில் செலுத்தி அழைக்கும் போது வர மறுத்துள்ளார். அதன்பின் பொன்ராஜ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி ஒன்று அவருக்கு வந்துள்ளது. திடீரென பொன்ராஜ் நம்பரை பயன்படுத்தி காவல்துறையில் ஆன்லைன் புகார் சென்றதால், பொலிசார் பொன்ராஜை விசாரணைக்கு அழைக்கும் போது தான் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து பொன்ராஜ்க்கு வந்த செல்போன் அழைப்பை வைத்து பொலிசார் பிரியா என்ற பெண்னை பிடிக்க திருநெல்வேலிக்கு சென்ற போது அதிர்ச்சியடைந்தனர்.

காரணம் பெண் குரலில் பேசி மோசடி செய்தது வலன் ராஜ்குமார் ரீகன் என்ற வாலிபர் என தெரியவந்துள்ளது.

ரீகனிடம் விசாரித்ததில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் 1000-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் இதுபோன்று நூதன முறையில் மோசடி செய்து பணம் பறித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பல பெண்களின் நிர்வாண போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி, மோசடி வலையில் சிக்கும் ஆண்களிம் ஆபாச உரையாடல்கள், போட்டோக்கள், வீடியோக்கள் பயன்படுத்தி பொலிசில் மாட்டிவிடுவேன் என கூறியும், ஓன்லைன் புகார் கடிதத்தை அனுப்பியும் மிரட்டி பணம் பறித்து உள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

லோகாண்டா செயலியில் போன் மூலம் ஆபாசமாக ஒரு மணி நேரம், பேசுவதற்கு ஆயிரம் ரூபாய், ஆபாசமாக வீடியோ காலில் 30 நிமிடம் பேசுவதற்கு 1,500 ரூபாயும், குறுஞ்செய்தி மூலம் ஆபாசமாக ஒரு மணி நேரம் பேசுவதற்கு 500 ரூபாய், என அட்டவணை போட்டு, பிரியா மற்றும் ரூபா என்ற பெயரிலும் லொக்னடோ செயலி மூலம் பலரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஓடியோ கால், குறுஞ்செய்தியில் ஆபாசமாக பேசும் வரை பிரச்சனை இல்லை, வீடியோ காலில் பேச அழைக்கும் போது முகம் தெரியும் என்பதால் ரீகன் மறுத்து வந்துள்ளார். ஆனால் வலையில் சிக்கிய ஆண்கள் ரீகனை பெண் என நினைத்து ஆபாசமாக பேச தொடர்ந்து செல்லில் அழைக்கின்றனர். பணம் போட்டு கெஞ்சுகின்றனர்.

பணம் வருவது நின்றவுடன் ஓன்லைனில் ரீகன், பெண் பெயரில் புகார் அளித்து வலையில் சிக்கும் ஆண்களை மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் பல ஆண்களை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. மேலும் துபாய், மலேசியா, அமேரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ள ஆண்கள் ஏமாறியதும் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்று டெக்னாலஜியை பயன்படுத்தி பல ஆண்களை மிரட்டி சொத்துக்களையும் குவித்துள்ளார். இவ்வாறு மோசடி செய்து சொந்தமாக வீடு கார் மற்றும் பல்வேறு சொத்துக்களை வாங்கி கோடீஸ்வரனாக சொகுசாக வாழ்ந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் ரீகனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியச்செய்திகள்