பயங்கரவாத விசாரணையை கண்காணிக்க குழு

உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகை கண்காணிக்க தேசிய புலனாய்வு பிரிவு தலைவர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தலைமையில் அறுவரை கொண்ட குழு இன்று (23) நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விசாரணைகளில் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை இக்குழு வாரத்துக்கு ஒருமுறை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவுக்கு அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.