இராணுவச் சிப்பாய் மர்ம மரணம்

கண்டி – பிலிமதலாவ போயகம பிரதேசத்தில் எலுகொடை ஓயாவில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (23) காலை இந்த சடலம் பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

25 வயதுடைய குறித்த பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தில் பணியாற்றும் இவர் விடுமுறைக்காக வீடு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Allgemein