வடக்கில் மாதமும் மும்மாரி கஞ்சா மழை வருகின்றது?

வடக்கில் மழை பெய்கின்றதோ கஞ்சா பொதிகள் மட்டும் நாள் தவறாது வந்து கொண்டேயிருக்கின்றது.இன்றும் மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட துள்ளுக்குடியிருப்பு வசந்தபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 3 கோடி ரூபாய் பெறுமதியான  கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.அத்துடன் சந்தேக நபர் ஒருவரும்; கைது செய்யப்பட்டுள்ளார்.
துள்ளுக்குடியிருப்பு வசந்தபுரம் பகுதியில் 205 கிலோ 44 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளை இலங்கை காவல்துறை மீட்தோடு,பேசாலை பகுதியை சேர்ந்த ஒருவரையுமே கைது செய்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதி வய்ந்தவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பகுதியில் நெருக்கமான சோதனைகள் ஆரம்பிக்க யாழ்.வரத்தொடங்கிய கஞ்சா தற்போது யாழில் வேட்டை மும்முரமடைந்துள்ளதையடுத்து மீண்டும் மன்னார் வர தொடங்கியுள்ளது.