பிரித்தானியாவில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா?

பிரித்தானியாவில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு எவ்வளவு செல்வாகும்  தெரியுமா?

பிரித்தானியாவில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு எவ்வளவு செல்வாகும்? எத்தனை நாட்களில் பெறலாம் என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா வெளியேறியுள்ள நிலையில், அடுத்த மாதம் புதியதாக நீல நிற பாஸ்போர்ட் அரசாங்கம் வழங்கவுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவில் பாஸ்போர் புதுப்பித்தலுக்கு எவ்வளவு செலவாகும் என்பதை பிரபல ஆங்கில ஊடகம் டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அதில் புதிதாக வரவுள்ள நீல நிற பாஸ்போர்ட்டிற்காக என்பது குறித்து குறிப்பிடவில்லை.

பொதுவாக பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு ஆகும் செலவுகள் என்று வெளியிட்டுள்ளது.

அதன் படி, நீங்கள் 16 அல்லது அதற்கு மேல் வயதுடையவராக இருந்தால், உங்களுக்கு பாஸ்போர்ட் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதே சமயம் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டாலோ, திருடுபோய்விட்டாலோ, மிகவும் மோசமாக இருந்தாலோ, அதை நாம் திரும்ப பெற முடியும்.

ஆனால் பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டால், நீங்கள் பிரித்தானியாவில் இருந்து அடுத்த பயணம் செய்வதற்குள் கண்டிப்பாக புதுப்பித்தே ஆக வேண்டும்.

பாஸ்போர் புதுப்பிப்பதற்கு ஆகும் செலவு?
  • பாஸ்போர்ட் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவர்கள் ஆன்லைனில் பெறுவதற்கு 75.50 பவுண்ட் செலவாகும், அதே சமயம் நீங்கள் காகித முறையில் விண்ணப்பித்தால் 85 பவுண்ட் ஆகும்.
  • அடிக்கடி பயணிக்கும் பாஸ்போர் பயன்பாட்டாளர்கள் புதுப்பிப்பதற்கு 50 பக்கம் என்று ஆன்லைனில் விண்ணப்பிக்க 85.50 பவுண்ட், காகித முறையில் என்றால் 95 பவுண்ட் வரும்.
  • குழந்தையின் பாஸ்போர்ட்டிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 49 பவுண்ட், அதுவே காகித வடிவத்தில் என்றால் 58.50 பவுண்ட் செல்வாகும்.
  • இதுவே அடிக்கடி பயணிக்கும் குழந்தையாக இருந்தால், அந்த குழந்தையின் பாஸ்போர்ட்டிற்கு ஆன்லைன் விண்ணப்பம் 59 பவுண்ட், காகித வடிவில் என்றால் 68.50 பவுண்ட் ஆகும்.
  • நீங்கள் செப்டம்பர் 2, 1929-ஆம் ஆண்டு அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்திருந்தால், உங்கள் பாஸ்போர்ட் விண்ணப்பம் ஆன்லைனில் அல்லது காகித படிவத்தில் இலவசமாக செய்யலாம்.
  • உங்கள் பாஸ்போர்ட்டை அவசரமாகப் பெற விரும்பினால், நீங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
  • நீங்கள் வெளிநாட்டில் பிரித்தானிய குடியுரிமை பெற்றவராக இருந்தால், உங்கள் பாஸ்போர்ட்டுக்கு வேறு கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும்.
பாஸ்போர்ட் எத்தனை நாட்களில் அல்லது எவ்வளவு நேரங்களில் வரும்?

புதிய பாஸ்போர்ட்டை செயலாக்குவதற்கும், அதை வழங்குவதற்கும் பொதுவாக மூன்று வாரங்கள் ஆகும். இருப்பினும் உங்களுக்கு பாஸ்போர்ட் அவசரமாக தேவைப்பட்டால் அதற்கான விருப்பங்கள் உள்ளன.

அரசாங்கத்தின் ஆன்லைன் பிரீமியம் சேவையைப் பயன்படுத்தி ஆன்லைனில் அவசர பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம், அங்கு நீங்கள் பணம் செலுத்தலாம் மற்றும் உங்கள் பாஸ்போர்ட்டை விரைவாகப் பெற பதிவு செய்யலாம்.

ஆன்லைனில் மட்டுமின்றி விரைவாக பெறுவதற்கு காகித பிரீமியம் சேவையிலும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தபால் நிலையத்திலிருந்து காகித விண்ணப்பம் பெறுதல், ஆன்லைனில் சந்திப்பை முன்பதிவு செய்தல் மற்றும் கட்டணம் செலுத்துதல் ஆகியவை அடங்கும்.

மற்றொரு சேவையும் உண்டு. ஒரு வாரத்திற்குள் பாஸ்போர்ட் உங்கள் வீடு தேடி வரும். அதற்கு ஒரு வாரம் பாஸ்ட் ட்ராக் என்ற சேவையை பயன்படுத்த வேண்டும். அதாவது பாஸ்போர்ட் அலுவலகத்துடன் சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு வாரத்திற்குள் உங்கள் பாஸ்போர்ட்டை பெறலாம்.