தமிழக கலைஞர்கள் பெரியோர்களால் உலக திருக்குறள் மகாநாட்டில் இசைவேந்தன் ”விருது

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ,சென்னை தமிழ்நாடு அரசு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ,முகில் படைப்பகம் ,யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இணைந்து நடாத்திய ”உலக திருக்குறள் மகாநாட்டில் “ உலக அறிஞர்கள் மத்தியில் “இசை வேந்தன் ”விருது வழங்கி கௌரவித்ததோடு எனது இசையில் திரைப்பட பாடலாசிரியர் வித்தியாசகர் வரிகளில் தந்தையின் பெருமை கூறும் பாடலும் வெளியீடு செய்யப்பட்டது .இதுவரையில் எத்தனையோ விருதுகளை பெற்றிருந்தாலும் அந்த விருதுக்கு தகுதி உடையவனா என்று பலமுறை நினைத்துள்ளேன் ஆனாலும் இவ்விருதையும் உங்கள் அன்புக்காக நிறைவோடு ஏற்றுக்கொள்கின்றேன் .எல்லா புகழும் இறைவனுக்கே இசை இளவரசன் விருதோடு இருந்த என்னை இசை வேந்தனாக்கிய பாடலாசிரியர் வித்தியாசகர் அண்ணன் மற்றும் தமிழ் நாடு எம் தொப்புள்கொடி உறவுகளுக்கு நன்றி

இதுவரை என் இசைக்காக கிடைத்த பட்டங்கள் /விருதுகள்

1.கலைவாணன் -நீதிபதி இளஞ்செழியன் அவர்களால்
2.வவுனியாவின் இசை மைந்தன் -ஐடியல் கல்வி நிலையம்
3.இசை இளவரசன் -சக்தி தொலைக்காட்ச்சியால்
4.இசை ஊற்று -பொன் மீடியா கலையகத்தால்
5.இளம் கலை ஜோதி -இன்பா நிருத்ய நிகேதன அளிக்கையால்
6.இசைவித்தகர் -வவுனியா விபுலானந்தா கல்லூரியால்
7.ஈழ இசையாளன் -பழவத்தை காளி அம்மன் தேவஸ்த்தானம்
8.கலை ஒளி -வவுனியா பிரதேச கலை இலக்கிய விழா வில்
9.புது இசைத்தென்றல் -கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்களால்
10.இளம் கலைச்சுடர் -அமைச்சர் றிசாட் பதுவுத்தீன்
11.கௌரவ கலாநிதி -இலங்கை பௌத்த சங்கம்
12.ஈழத்து பக்தி இசைவேந்தன் -பணிப்புலம் முத்து மாரி அம்மன் ஆலயத்தால்
13. முதலமைச்சர் விருது -சி.வி விக்னேஸ்வரன் ஐயா தலைமையில்
14. கலைச்சுடர் -அமைச்சர் மனோ கணேசன் அவர்களால்
15. இசைவேந்தன் -கவிஞர் வித்தியாசகர் முகில் படைப்பகம் சென்னை ,தமிழ் நாடு

அத்தனையும் இசைத்தாய்க்கே சமர்ப்பணம்

நிகழ்வுகள்