எம்பியிடம் கப்பம் கோரல் – ரிஷாம் கைது

அநுராதபுரம் மாவட்ட ஐக்கிய தேசியக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானிடம் ஐந்து இலட்சம் ரூபா கப்பம் பெற முயன்ற ஒருவர் இன்று (22) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகநூலில் பதிவிட்ட சர்ச்சைக்குரிய காணொளியை நீக்குவதற்கு இவ்வாறு கப்பம் கோரிய ரிஷாம் மாரூஸ் என்பவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.