வெளிநாடு ஒன்றில் ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சவுதி அரேபியாவில் பேருந்து சாரதிகளாக சேவை செய்வதற்காக இலங்கையர்களை இணைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தத்திற்கு இரண்டு நாட்டு பிரதிநிதிகளும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தில் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிநிதிகளும் சவுதி அரேபிய போக்குவரத்து பிரதிநிதிகளும் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1000 இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. 45 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன், 2 வருட அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கு செல்வதற்கு மூன்று வாரங்களுக்கு முன் இலங்கையில் ஆங்கிலம் மற்றும் அரபு மொழி பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.. தெரிவு செய்யப்படும் இலங்கையர்களுக்கு சவுதியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச விமான டிக்கெட், உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். எவ்வித கட்டணமுமின்றி இந்த தொழிலுக்கு செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.