தமிழர் பிரச்சினைக்கு உடன் தீர்வு வேண்டும்! பிரிட்டன்

இலங்கை வந்துள்ள பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மல்க்கம் ப்ருஸ் பிரபு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சுருக்கமாகப் பேச்சு நடத்தப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் காலதாமதமின்றி தீர்வுகள் கிடைக்க வேண்டும் என்பதில் பிரிட்டன் உறுதியாக உள்ளது என இந்தப் பேச்சின்போது பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மல்க்கம் ப்ருஸ் பிரபு குறிப்பிட்டார் என்று சரவணபவன் எம்.பி. மேலும் கூறினார்.