கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…. 2 பேர் கைது!

நேற்று இரவு 9.45 மணியளவில் விசேட அதிரடிபடையினர் நடத்திய சோதனையின் போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகை முனையத்திற்கு அருகில் பயணிகளுடன் முரண்பாட்டில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் சட்டவிரோதமான முறையில், விமான நிலையத்தில் வருகை முனையத்திற்கு அருகில் தரகர்களாக செயற்படுபர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 42 மற்றும் 49 வயதுடைய ஹரித்த பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், ஒரே நாளில் பயணிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் இரண்டு நபர்களையும், பயணிகளுக்கு இடையூறு விளைவித்த குறிறச்சாட்டில் மேலும் இருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல், கடுநாயக்க விமான நிலைய முனையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 60 பேர் வரை கைது கைது செய்யப்பட்டுள்ளதாக கடுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Allgemein