இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புரிந்துணர்வு உடன்படிக்கை

இலங்கையின் பெருந்தோட்ட பாடசாலைகளின் தரத்தை உயர்த்தும் முகமாக இந்தியாவும், இலங்கையும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்தியாவின் சார்பில் பதில் உயர்ஸ்தானிகர் வினோத்.கே. ஜேக்கப்பும், இலங்கை சார்பில் கல்வியமைச்சின் செயலாளர் சித்ரானந்தவும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இதன்கீழ் பெருந்தோட்டப்புறங்களின் 9 பாடசாலைகள் இலங்கை அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளன.

இதில் மத்திய மாகாணத்தில் 6 பாடசாலைகளும், ஊவா, சப்ரகமுவ மற்றும் தென்மாகாணத்தில் ஒரு பாடசாலையும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றுக்கு இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா நிதியின் மூலம் மேம்படுத்தல் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஏற்கனவே இந்தியா, இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மாணவர்களுக்காக பாரிய உதவி திட்டங்களையும், புலமைப்பரிசில் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Allgemein