November 30, 2022

அறிக்கைக்கு இலங்கை பதில் கருத்து வழங்க மறுப்பு: இலங்­கையை நெருக்­க­மாக கண்­கா­ணிப்­பது அவ­சியம்

 

ஜெனி­வாவில் இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள 30/1 என்ற பிரே­ர­ணையை இலங்கை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நெருக்­க­மான கண்­கா­ணிப்பை இலங்கை மீது மேற்­கொள்­ள­வேண்டும் என்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் மிச்செல் பச்லெட் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

மேலும் நிலு­வையில் உள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்­பான சம்­ப­வங்கள் குறித்து விரி­வான சுயா­தீ­மான பொறுப்­புக்­கூறல் விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் பயங்­க­ர­வாத தடைச் சட்டம் உட­ன­டி­யாக நீக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் மனித உரிமை ஆணை­யாளர் மிச்செல் பச்லெட் தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

சுதந்­திர தினத்­தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்­ப­டாமை தொடர்பில் கவலை வெ ளியிட்­டுள்ள மனித உரிமை ஆணை­யாளர் 30–1 என்ற பிரே­ர­ணையை முழு­மை­யா­கவும் விரை­வா­கவும் அமுல்­ப­டுத்­த­வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

30–1 என்ற பிரே­ர­ணையை இலங்கை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை பேர­வையின் 43 ஆவது கூட்டத் தொட­ருக்­காக தயா­ரித்­துள்ள இலங்கை குறித்த இடைக்­கால அறிக்­கை­யி­லேயே இந்த விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இந்த அறிக்கை ஏற்­க­னவே இலங்கை அர­சாங்­கத்­துக்கு அனுப்­பப்­பட்ட நிலை­யி­லேயே நேற்­றைய தினம் வெ ளியி­டப்­பட்­டது.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்ள முக்­கிய விட­யங்கள் வரு­மாறு

2015 ஆம் ஆம் ஆண்டு ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை 30–1 என்ற பிரே­ர­ணைக்கு அமைய நல்­லி­ணக்க விட­யத்தில் சில முன்­னேற்­றங்கள் காணப்­பட்­டாலும் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­காத மற்றும் பாது­காப்பு மறு­சீ­ர­மைப்பு விவ­கா­ரங்­களில் அர­சாங்­கத்தின் இய­லாமை வெ ளிப்­பட்­டுள்­ளது.

எனவே அமை­தி­யான சமூ­கத்தை உரு­வாக்­கவும் அனைத்து மக்­க­ளுக்கும் நிரந்­தர முன்­னேற்­றத்தை வழங்­கவும் 30– என்ற ஐ.நா. பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

காணாமல் போனோர் தொடர்பில் ஆராய நிய­மிக்­கப்­பட்­டுள்ள அலு­வ­ல­கத்­துக்கு சுயா­தீ­னத்­து­வமும் தேவை­யான வளங்­களும் வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். சிவில் சமூகம் மற்றும் ஊட­கங்­க­ளுக்­கான உரிமை உறு­தி­ப­டுத்­தப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

மனித உரிமை காப்­பா­ளர்கள் மற்றும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எதி­ரான கண்­கா­ணிப்­புக்கள் சித்­தி­ர­வ­தை­க­ளங பழி­வாங்கும் தன்மை போன்ற விட­யங்­களை உட­ன­டி­யாக நிறுத்­து­மாறு கோரிக்கை விடுக்­கின்றேன்.

சில இரா­ணுவ தேசி­ய­வா­தி­க­ளினால் முஸ்லிம் சிறு­பான்­மை­யி­னத்­து­வர்­க­ளுக்கு எதி­ராக வைராக்­கிய உரைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றமை குறித்தும் கவனம் செலுத்­தி­யுள்ளோம். இவற்றை தடுக்க அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கைளை எடுப்­பது முக்­கி­ய­மாகும்.

கடந்­த­கால மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக எந்­த­வி­த­மான பொறுப்­புக்­கூறல் நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலைமை மக்­க­ளுக்கு அர­சா­ங­கத்தின் மீதான அவ­நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும். எனவே நிலு­வையில் உள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்­பான சம்­ப­வங்கள் குறித்து விரி­வான சுயா­தீ­மான பொறுப்­புக்­கூறல் விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் .

அது­மட்­டு­மன்றி நடை­மு­றையில் உள்ள பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­க­வேண்டும். அதற்கு பதி­லாக சர்­வ­தேச தரத்­துக்கு அமை­வான சட்­டத்தை கொண்­டு­வ­ரலாம்.

இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள 30–1 என்ற பிரே­ர­ணையை இலங்கை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது தொடர்பில் ஐக­கிய நாடுகள் மனித உரிமை பேரவை நெருக்­க­மான கண்­கா­ணிப்பை இலங்கை மீது மேற்­கொள்­ள­வேண்டும்.

40–1 என்ற பிரே­ர­ணையின் ஏற்­பாட்­டுக்கு அமை­வா­கவே இந்த அறிக்­கையை நான் தாக்கல் செய்­கின்றேன். இது தொடர்­பாக தக­வல்­களை தரு­மாறு நான் இலங்­கை­யிடம் கேட்டேன். ஆனால் அவ்­வாறு தக­வல்­களை வழங்­கு­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் வாய்­மூ­ல­மாக மறுத்­து­விட்­டது. மேலும் இந்த அறிக்கை இலங்­கைக்கு அனுப்­பப்­பட்­டது. ஆனால் அதற்கு பதில் கருத்தும் இலங்­கை­யினால் வழங்­கப்­ப­ட­வில்லை. இலங்­கையின் பிர­தி­நிதி ஜெனிவா கூட்டத் தொடரில் உரை­யாற்­றும்­போது கருத்து வெ ளியி­டு­வ­தாக கூறப்­பட்­டு­விட்­டது.

புதிய அர­சாங்கம் பத­வி­யேற்ற பின்னர் 30–1 பிரே­ர­ணையின் வாக்­கு­று­தி­களை மீளாய்வு செய்­வ­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. அர­சா­ஙகம் கடந்­த­கால நிகழ்­வு­களை அபி­வி­ருத்­தியின் ஊடாக கையாள முயற்­சிக்­கின்­றது.

வள­மான இலங்­கையை உரு­வாக்­கவும் மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­றவும் 30–1 என்ற பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும். பொறுப்­புக்­கூ­ற­லுக்கும் நல்­லி­ணக்­கத்­துக்கும் இந்த பிரே­ர­ணையை ஒரு கட்­ட­மைப்பை வழங்­கு­கின்­றது. மனித உரிமை ஜன­நா­ய­கத்தை பாது­காத்தல் சட்­டத்தின் ஆட்­சி­ப­டுத்­தலை உறு­தி­ப­டுத்­தலை இந்த பிரே­ர­ணையை வலி­யு­றுத்­து­கின்­றது.

இந்தப் பிரே­ர­ணைக்கு இலங்கை இணை அனு­ச­ரணை வழங்­கி­ய­மை­யா­னது தீர்க்­க­மா­ன­தாகும். இந்த நிலையில் கடந்த ஐந்து வரு­ட­கா­லத்தில் சில முன்­னேற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஆனால் முழு­மை­யான பொறுப்­புக்­கூறல் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

2015 ஆம் ஆண்டில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை மீளப்­பெ­று­வ­தா­னது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூ­றலில் பாரிய பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தும். 30–1 பிரே­ர­ணையை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்டும் என்று வலி­யு­றுத்­து­கின்­றது. காணாமல் போனோர் அலு­வ­லகம் மற்றும் இழப்­பீட்டு அலு­வ­லகம் என்­ப­ன­வற்­றுக்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை தொழில்­நுட்ப உத­வி­களை வழங்­கு­கின்­றது.

காணாமல் போனோர் தொடர்பில் அர­சாங்கம் வித்­தி­யா­ச­மான கருத்தை தெரி­வித்­தமை சர்ச்­சையை பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யது. காணாமல் போனோ­ருக்கு மரண சான்­றிதழ் வழங்­கப்­படும் என்றும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் இது தொடர்பில் நீண்ட விரி­வான அனு­கு­மு­றையை முன்­னெ­டுக்­கு­மாறு அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுக்­கின்றேன். இழப்­பீடு வழங்­கு­வதன் ஊடாக மட்டும் இதனை அடைய முடி­யாது.

காணாமல் போனோர் பிரச்­சி­னைக்கு முடி­வுக்கு கொண்­டு­வர அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. ஆனால் காணாமல் போனோர் அலு­வ­ல­கத்­துக்கும் இழப்­பீடு வழங்கும் அலு­வ­ல­கத்­துக்கும் அர­சியல் ரீதி­யான ஆத­ரவை வழங்­க­வேண்டும்.

உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை ஸ்தாபிப்­பதில் முன்­னேற்­றத்தை காண முடி­ய­வில்லை. 30–1 பிரே­ர­ணையில் குறிப்­பிட்­டுள்­ள­மைக்கு அமைவாக மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து ஆராய ஒரு நீதிமன்ற கட்டமைப்பை உருவாக்குவதிலும் முன்னேற்றமில்லை. 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கூறப்பட்டுள்ளது. ஆனால் சட்டமா அதிபர் அதனை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தெரிகின்றது.

19ஆவது திருத்தச் சட்டம் முக்கிய நிறுவனங்களின் சுயாதீன தன்மையை உறுதிபடுத்துகின்றது. ஆனால் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தால் அதனை நீக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. அத்துடன் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வது தொடர்பாக ஜனாதிபதி தனது எதிர்ப்பை வெ ளியிட்டிருந்தார்.

பெப்ரவரி நான்காம் திகதி நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழில் பாடப்படாமை கவலைக்குரிய விடயமாகும்.