சாய்ந்தமருது நகர சபை பறிபோனது; அரசு காட்டிய அதிர்ச்சி

கல்முனை மாநகர சபையில் இருந்து பிரித்து சாய்ந்தமருது நகர சபையை உருவாக்க வெளியிட்ட வர்த்தமானியை அரசு இடைநிறுத்தியுள்ளது.

இந்த முடிவை அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று (20) சற்றுமுன் தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இதுபோல் பிரச்சினைகள் இருப்பதால் சாய்ந்தமருதுக்கு மட்டும் தனியான கவனம் செலுத்தாமல், அனைத்து பிரச்சினைகளையும சேர்த்து ஒரு தீர்வை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

எனவே தான் சாய்ந்தமருது நகர சபைக்காக வெளியான விசேட வர்த்தமானி மீளப்பெறப்படுகிறது – என்றார் அமைச்சர்.