குளத்தில் மூழ்கிய நால்வர் பலி

திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் மூழ்கி நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பதுளை – ஹாலி எலவில் இருந்து சுற்றுலா சென்ற மாணவர்களே நேற்று (19) மாலை இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹாலி எல பகுதியிலுள்ள பாடசாலையில் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் சம்பவத்தில் மூவர் மீட்கப்பட்டுள்ளனர்.

தாயகச்செய்திகள்