ஐநாவில் இருந்து விலக அரசுக்கு அனுமதி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணையில் இருந்து விலக அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015ம் ஆண்டு 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் பாேது அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த அமைச்சரவை முடிவை அறிவித்துள்ளார்.