தென்கொரிய ஜனாதிபதிக்கு சிறை

2008 – 2013 காலப்பகுதியில் பாரிய அளவில் இலஞ்சம் பெற்ற தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி லீ மையுங்-பக்குக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் 15.7 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 2018ம் ஆண்டு இவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து தாக்கல் செய்த மேன் முறையீட்டு தீர்ப்பிலேயே குறித்த தண்டனையை உறுதி செய்து மேலும் இரு ஆண்டுகளை அதிகரித்து 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உலகச்செய்திகள்