தமிழர் தாயகத்தின் காணிகளை ஹிஸ்புல்லாவிற்கு விற்ற தமிழர்களின் விபரம்…..

தமிழர் தாயகத்தின் காணிகளை ஹிஸ்புல்லாவிற்கு விற்ற தமிழர்களின் விபரம்.....

மட்டக்களப்பு மாவட்டத்தின் தனி தமிழர் தாயகப் பகுதியான வாகரை பிரதேசத்தில் உள்ள அரச காணிகளுக்கு மோசடியாக உறுதி பத்திரங்கள் தயாரித்து அதனை ஹிஸ்புல்லாவின் தொண்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தமை ஆதாரங்கள் ஊடாக வெளியாகியுள்ளது.

ஹிஸ்புல்லாவின் பெயரில் உள்ள ஹிராபவுண்டேசன், ஹிஸ்புல்லாவின் மகனின் பெயரில் உள்ள ரொயல் பார்க்க மற்றும் லங்கா பிரைவட் லிமிடெட் போன்ற நிறுவனங்களுக்காக போலியாக தயாரிக்கப்பட்ட காணி ஆவணங்கள் சில வெளியாகியுள்ளது.

சுமார் 45 ஏக்கருக்கு மேற்பட்ட அரச காணிகளை தனியார் காணிகளாக மற்றி ஹிஸ்புல்லாவின் மேற்படி நிறுவனங்களுக்கு விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது.

இந்த போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு மட்டக்களப்பு கச்சேரியில் உள்ள சில அதிகாரிகள் உதவியுள்ளமை தெரியவந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டால் போலி ஆவணங்களை தயாரிக்கும் பலர் பிடிபடுவார்கள் என தெரியவந்துள்ளது.

இவ்வாறு வாகரை,காயங்கேணி பிரதேசத்தில் பல நூறு ஏக்கர் காணிகளை தமிழ் அதிகாரிகளுடன் இணைந்து ஹிஸ்புல்லா அவர்கள் தனது நிறுவனங்களின் பெயர்களில் எழுதி அதனை வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.