கூட்டமைப்பிலிருந்து மஹிந்த கட்சிக்கு தாவும் இருவர்!

கூட்டமைப்பிலிருந்து மஹிந்த கட்சிக்கு தாவும் இருவர்!

தமிழ் தேசிய நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று மாலை இடம்பெற்றது. இதன்போது, முக்கிய விவகாரங்கள் எதுவும் ஆராய்ப்படவில்லையென ஊடகம் ஒன்று குறித்த தகவலை அறிந்துள்ளது.

மேலும் மீண்டும் நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெறும் எனவும் அறியமுடிகிறது.

இன்றைய கூட்டத்தின் ஆரம்பத்தில், கூட்டமைப்பின் எம்.பிக்கள் எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் உள்ளிட்டவர்கள் வந்திருக்கவில்லை. இதையடுத்து. எம்.ஏ.சுமந்திரனிற்கு அழைப்பேற்படுத்தும்படி, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனிடம், இரா.சம்பந்தன் கூறினார்.

சுமந்திரனிற்கு அழைப்பேற்படுத்தவில்லை, அவரது தொலைபேசி இலக்கம் என்னிடம் இல்லையென சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆர்வமின்றி பதிலளித்துள்ளார்.

கூட்டமைப்பின் எம்.பிறொருவர், சக எம்.பியின் இலக்கம் இல்லையென்பதா? இது என்ன? என மாவை உள்ளிட்ட சக எம்.பிக்கள் ஆச்சரியத்துடன் வினவினார்கள்.

அப்பொழுதுதான் சார்ள்ஸ் இரு முக்கிய விவகாரத்தை வெளிப்படுத்தினார்.

அவரது தொலைபேசி இலக்கத்தை எதற்காக நான் வைத்திருக்க வேண்டும். நான் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினால் அவர், பதிலளிப்பதில்லை. பதிலளிக்காத ஒருவரின் இலக்கத்தை எதற்காக வைத்திருக்க வேண்டும் என்றார்.

பின்னர், மாவை சேனாதிராசா அழைப்பை ஏற்படுத்தினர். பின்னர் கூட்டம் முடியும் தறுவாயிலும் சுமந்திரன் கூட்டத்திற்கு வரவில்லை.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை பற்றி இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். அடுத்த முறை கூட்டமைப்பின் ஆசனங்களை 17 ஆக உயர்த்த வேண்டும், யாழில் 6 ஆசனங்களை பெற்றுக்கொள்ள வேண்டும், அதற்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றார்.

எனினும் இந்த கருத்தை மாவை சேனாதிராசா அதை மறுத்தார். கள நிலவரங்களை தெரிந்து கதைக்க வேண்டும். நாங்கள் சரிவடைவோம் என சொல்லவில்லை. களத்தில் எப்படியான நிலையுள்ளதை தெரிந்து, இன்னும் கடுமையான முயற்சிக்க வேண்டும் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைந்த பின்னர் சிலர் மஹிந்த தரப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் எனக்கு நம்பிக்கையாக தெரிய வந்துள்ளது.

பணமும், பதவியும் பேரம் பேசப்பட்டு இதற்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டன என்பதை நம்பிக்கையான வழிகளில் நான் அறிந்துள்ளேன் என்றார்.

(2020இல் தமிழ் தேசிய கூட்டமைபில் களமிறங்கும் மட்டக்களப்பின் இளம் உறுப்பினர் மற்றும் யாழ். உறுப்பினர் என இருவரை, அவர்கள் வெற்றிபெற்றதும், அரசு பக்கம் தாவி அமைச்சு ஏற்பதை போன்ற சூட்சும திட்டமொன்றை, இரா.சம்பந்தனிடம், கட்சியின் செயல் தலைவர் முன்வைத்த விவகாரத்தை இலங்கை ஊடகம் ஒன்று அம்பலமாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.)

வரும் 23ம் திகதி அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறுவதாகவும், அன்று மாலை 5 மணிக்கு கட்சியின் வேட்பாளர் நியமன குழு கூடவுள்ளதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

Allgemein