கமல்ஹாசன் படப்பிடிப்பு தளத்தில் விபத்து 4 பேர் பலி!

திரை இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிற நிலையில்படத்தின் படப்பிடிப்பு, சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த நசரத் பேட்டை ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. படத்திற்கான செட் வேலையின் போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
விபத்து நடந்த இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் துணை இயக்குநர்கள் எனவும்  அதே வேளை இயக்குநர் ஷங்கரின் கால் முறிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்து உள்ளனர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
இந்தியச்செய்திகள்