August 11, 2022

முதலைக்கண்ணீர் வடிக்கும் கூட்டமைப்பு உறுப்பினர்கள்!

விடுதலைப் புலிகள் இருக்கும் வரை மட்டுமே ஸ்ரீலங்கா பாதுகாப்பாக இருந்தது. இந்தியாவின் பாதுகாப்பு கூட விடுதலைப் புலிகளின் கைளிலேயே தங்கியிருந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவிததுள்ளார்.

விடுதலைப்புலிகள் காலத்தில் மருத்துவராக இருந்த இவர் இறுதி போர் கட்டத்தில் தப்பித்து வவுனியா சென்று ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிவந்த நிலையில் கூட்டமைப்பின் எம்பியாக மக்களுக்கு பல சேவைகளை செய்துவருவதாக சொல்லி வருகின்றார்.

ரணிலுக்கு ஆதரவாக செயற்படும் இவர்கள் பாராளுமன்றங்களில் நடைபெறும் வாக்கெடுப்புக்களில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்தினை காப்பாற்றி வரும் அதேவேளை இதுவரை முள்ளிவாய்க்கால் போரில் தமிழர்கள் சிங்கள படைகளால் அழிக்கப்பட்ட உண்மையினை உலகிற்கு சொல்ல மறந்து வருகின்றார்கள்.

தங்கள் தேர்தல் பரப்புரைக்காகவும் வாக்குகள் சேகரிப்பிற்காவம் அவ்வப்போது மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகளையும் தமிழர்களின் போராட்டத்தினையும் நினைவு படுத்தி பேசி தங்கள் வாக்குகளை தக்கவைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.