August 15, 2022

திடீர் சோதனை நடவடிக்கை – 13 பேர் கைது

பேருவளை பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இராணுவம் மற்றும் விமானப் படையினர் இணைந்து சுமார் 630 வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது பாதுகாப்பு படையினரின் உடைகளை ஒத்த உடைகள் மற்றும் வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மேலதிக விசாரணைக்காக பேருவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.