டோட்முன் மாநகரில் நடைபெற்ற வணக்கம் ஐரோப்பா என்ற கலை நிகழ்வின் நிதி ஈட்டலின்! மூன்றாவது கொடுப்பனவு தகவல்கள்

28/06/19 யேர்மனி ஸ்ருட்காட்டில் இயக்கும்
உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு???
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தேடி உதவி செய்யும் பயணத்தில்.
இன்று எமது அமைப்பின் ஊடாக.
01/01/2019 அன்று டோட்முன் மாநகரில் நடைபெற்ற வணக்கம் ?????? ஐரோப்பா என்ற கலை நிகழ்வின் நிதி ஈட்டலின்!
மூன்றாவது கொடுப்பனவு!
தாயகத்தில் நடந்து முடிந்த யுத்தத்தில் நாட்டுக்காக போராடி தனது தலை உட்பட உடல் முழுவதும் விழுப்புண் அடைந்து அடிக்கடி சுய நினைவு இழந்து மயங்கி விழும் காரணத்தால் தொழிலுக்கு செல்ல முடியாமல் துணைவியாரின் உழைப்பில் ஆறு பிள்ளைகளுடன் மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் வாழ்ந்துவரும்.
யாழ் மாவட்டம் கலைவாணி வீதி சிறுப்பிட்டி நீர்வேலியை சேர்ந்த முன்னால் போராளியான திரு செல்லன் மகேந்திரம் அவர்கள் கோழிக்கூடு அமைத்து கோழியும் வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்கி.
ஒரு லட்சத்தியிருபதினாயிரம் (120,000) ரூபாயில்
அதை செய்து வழங்கியுள்ளோம்.
இதை முன்னின்று வழங்கிய யாழ் மாவட்டத்தை சேர்ந்த எமது செயல்பாட்டாளர் திரு சிங்கபாகு சிவகுமார் அவர்களுக்கும் இந்த உதவியை வழங்கிய வணக்கம் ஐரோப்பா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும்.??????




