August 10, 2022

சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் இத்தோடு முடிவடைந்து விட்டது..!

இதுவரை காலத்தில் தமிழ் மக்களை மிக மோசமாக ஏமாற்றிய ஓர் அரச தலைவராக மைத்திரிபால சிறிசேனவுள்ளதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு ஏமாற்றுக் காரராகத் தன்னைச் சித்தரித்துக் கொண்டுள்ள ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் இத்தோடு முடிவடைந்து விட்டது.

இனிவரும் காலங்களில் அவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராகக் கூட மக்கள் தெரிவு செய்ய மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததையும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதையும் ஒப்பிட முடியாது என்றும் நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி, அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.